அவசர தேவை நிதி(Emergency Fund) கடன் என்கிற படுகுழிக்குள் விழாமல் நம்மை காப்பாற்றும். அவசர தேவை என்பது திடீரென மருத்துவ செலவு, திடீரென வீட்டில் செய்யவேண்டிய மராமத்து வேலை, திடீர் பணி இழப்பு, திடீர் வாகன பிரச்சனை போன்ற சமயங்களில் யார் கையையும் எதிர் பாராமல், வங்கி கடன் வாங்காமல் பிரச்சனையை சமாளிக்க உதவும். குறைந்தப் பட்சம் ஒரு மாதத்திற்கான செலவு முதல் 3- 6 மாதத்திற்கான செலவிற்கான பணத்தை அவசர தேவை நிதியாக வைத்திருப்பது உசிதம். அவசர தேவை நிதி என்பது அவசர தேவைக்கு மட்டுமே. அதை கொடைக்கானல் விடுமுறைக்கோ அல்லது தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கோ உபயோகப் படுத்தக் கூடாது. அவசர தேவை நிதியை உபயோகப் படுத்தும் சூழ்நிலை வருமானால், முதல் வேலையாக பணத்தை சேமித்து, அவசர தேவை நிதியை செலவுக்கு முன்பிருந்த நிதி நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். மேலும், அவசர தேவை நிதி பணமாக இருக்க வேண்டும். எளிதாக உபயோகப் படுத்தும் வகையில் நீர்மமாக(Liquidity), நல்லதொரு வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். கடன் அட்டை அவசர நிதியாகாது. அவசர நிதியை எங்கேனும் முதலீட்டில் இருந்தால், உடனே பணமாக்க இயலாது. அவசர தேவை நிதி என்பது மன அமைதிக்கு, கடன் அரக்கனை அண்டாமல் இருக்க செய்வதற்காக மட்டுமே. முதலீட்டிற்காக அல்ல.
கேட்கறதுக்கு நல்லா இருக்குங்க.. செயல்படுத்தத்தான் முடியறதில்லைங்க....
ReplyDeleteவருகைக்கு நன்றி. ஆரம்பத்துல கஷ்டமாகத்தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து, அவசர தேவை நிதியை உருவாக்குங்க.
Deleteசரியே...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி.
Delete